உலக செய்திகள்
1. ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா.
தேசிய செய்திகள்
2. உத்திரப் பிரதேச அரசாங்கமானது அம்மாநிலத்தின் அரசாணையை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுடன் சேர்த்து சமஸ்கிருத மொழியில் வெளியிட முடிவு செய்துள்ளது. மேலும் சமஸ்கிருதம் உத்திரகாண்ட் மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் உள்ளது.
3. பாலகோட் தாக்குதலானது இந்திய விமானப் படையால் “பந்தர் நடவடிக்கை” என பெயரிடப்பட்டுள்ளது.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயற்குழு இயக்குநராக ரபி மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபுரி செருப்பிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. எப் ஐ எச் மகளிர் ஹாக்கி சீரிஸ் இறுதி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
7. ஹாலே ஒபன் - 2019 சாம்பியன் பட்டத்தை ரோஜர் பெடரர் வென்றார். இது பெடரர் கைப்பற்றும் 10-வது ஹாலே பட்டமாகும்.
முக்கிய தினங்கள்
8. ஜுன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம்