உலக செய்திகள்
1. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்எல்லையில் பறப்பதற்கு விதித்திருந்த தடையை சுமார் நான்கரை மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னணு சிகரெட்டுகள் மூளைத்தண்டின் செல்களில் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
3. தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தை, வெளிநாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதாக கூறி குத்தகையை மறுத்ததால் பாகிஸ்தானிற்கு சர்வதேச முதலீட்டு தீர்ப்பாயம் 40 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.
4. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக இத்தாலியை சேர்ந்த டேவிட் மரியா சசோலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. இந்திய அயல்நாட்டு பணி அதிகாரியாக வெளியுறவு துறை செயலாளரான விகாஸ் ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
6. மத்தியப்பிரதேசத்தில் ரேவாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் திட்டம் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனால் ரூ. 20 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
7. விக்ரமஷீலா கங்கை நதி டால்பின் சரணாலயத்தில் (VGDS - Vikramshila Gangetic Dolphin Sanctuary)கங்கை நதி டால்பின்களை பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகளை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
8. பிரிவினைவாதத்தின் அடிப்படையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (Sikhs for Justice - SFJ) பிரிவினைவாத குழுவை இந்திய அரசு தடைசெய்துள்ளது.
9. பாகிஸ்தானின் கர்தார்பூர் உள்ள சாஹிப்பின் குருத்வாராவிற்கு இந்திய புனித பயணிகள் ஒரு வருடத்திற்கு சிறப்பு அனுமதி இல்லாமல் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
10. இந்திய கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி ஆறாவது முறையாக ஏஐஎப்எப் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதினை பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஏஐஎப்எப் சிறந்த பெண்கள் கால்பந்து வீரர் விருதினை ஆஷல்தா தேவியும் ஏஐஎப்எப் சிறந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் விருதினை தங்மி கிரேஸும் பெற்றனர். சிறந்த கால்பந்து வளர்ச்சி விருதினை ஜம்மூ மற்றும் காஷ்மீர் கால்பந்து குழுமமும் சிறந்த நடுவர் விருதினை தமிழகத்தின் ஆர் வெங்கடேஷும் வென்றனர்.
முக்கிய தினங்கள்
11. ஜுலை 17 - சர்வதேச நீதி நாள்..