தேசிய செய்திகள்
1. தேசிய புலனாய்வு அமைப்பை (என் ஐ ஏ) வலுப்படுத்தும் வகையில் “ என் ஐ ஏ சட்ட மசோதா 2019” மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் மாதிரி குத்தகைச்சட்டம், 2019ற்கான வரம்பை வெளியிட்டுள்ளது.
3. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் வருடாந்திர விளையாட்டுகள் மாநாட்டில் 2019ஆம் ஆண் டின் சிறந்த விளையாட்டு வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான "சரத்கமல்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
4. முதலாவது பத்திரிக்கை சுதந்திரத்திற்கான சர்வதேச கருத்தரங்கு இலண்டன் நகரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா இணைந்து நடத்தியுள்ளது.
5. முதன் முறையாக பூட்டான் மற்றும் வங்கதேசத்திற்கு இடையே சரக்கு போக்குவரத்திற்கு இந்திய நீர்முழ்கி கப்பல்களின் பாதை பயன்படுத்த உள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா புதிய சாதனை. மகளிர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இந்தியாவின் இளவேனில் வளரிவன். இதே போட்டியில் இந்தியாவின் மெஹீலி கோஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
முக்கிய தினங்கள்
7. ஜீலை 15 - “உலக இளைஞர் திறன் வளர்ச்சி நாள்”. 2019 ம் ஆண்டிற்கான மையக்கரு: “வாழ்க்கை மற்றும் வேலைக்காக கற்றுக்கொள்ள கற்றுக் கொள்வது”
8. ஜூலை 16 - காரைக்காலில் மாங்கனி இறைத்தல் விழா கொண்டாடப்படுகிறது.