உலக செய்திகள்
1. சோயா அக்தர் இயக்கிய 'கல்லி பாய்' என்ற படத்திற்கு தென் கொரியாவின் புசியான் நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான புச்சியோன் சர்வதேச திரைப்பட விழாவின் 23 வது பதிப்பில் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான நெட்வொர்க் ஃபார் ஆசிய சினிமா என்ற விருது வழங்கப்பட்டது..
தேசிய செய்திகள்
2. தமிழகத்துக்கான அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனிசிறப்புப் பிரிவுகள் சென்னையிலும், தில்லியிலும் தொடங்கப்படும் என்று முதல்வர் சட்டபேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்டார். அந்நிய முதலீடுகளை ஈர்க்க “யாதும் ஊரே” என்ற இணையதளமும் உருவாக்கப்படும்.
3. புதுச்சேரி அரசில் அமைச்சரவைக்கே முழு அதிகாரம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1962-ம் ஆண்டு 14-வது சட்டதிருத்தத்தின் படி பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
4. 2019-ம் ஆண்டின் ஆதார் மற்றும் இதர சட்டங்களின் சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. ஆதார் சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு அமைத்த குழு – நீதிபதி N. ஸ்ரீ கிருஷ்ணா குழு.
5. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விவகாரத்துறை செயலராக விகாஸ் ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சந்தை மூலதனத்தில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸை முறியடித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலிடத்தை பெற்றுள்ளது.
வர்த்தக செய்திகள்
7. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரதை அடைவதற்கான முயற்சிக்காக பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துடன் நெடுஞ்சாலைகள்
8. துறை ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
9. அனைத்து பாகிஸ்தான் பொருட்களுக்கும் 200% வரி விதிப்பதற்கான சட்டமன்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
10. விம்பிள்டன் இறுதிச் சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் மற்றும் சிமானோ ஹேலப் மோதுகின்றனர்.