உலக செய்திகள்
1. சீனத் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் சாதனங்கள் அல்லது சேவைகளை ஐந்து கண்கள் (Five Eyes) எனப்படும் நாடுகள் பயன்படுத்தினால், அந்நாடுகளுடன் பகிரப்பட்டு வரும் நுண்ணறிவுத் தரவுகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
2. பெல்ஜியம் அணுக்கரு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த லுக்ரிசியா டெர்சி என்பவர் சிக்கலான இந்தியப் பருவ மழையைக் கணிப்பதற்கு அணுக்கரு வெடிப்புகளை கண்டறிவதற்கான சாதனங்களின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
தேசிய செய்திகள்
3. மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கவும் மற்றும் மலையில் அதிக உயரத்தில் உள்ளவர்களை மீட்கவும் "சிக்ஸ் சிக்மா" நிறுவனத்தை ருத்திரபிரயாக் மாவட்டத்தில் அமைக்க உத்தரகாண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
4. ஜல் சக்தி அபியான் பிரச்சாரத்தின் முதல் நிலையின் ஒரு பகுதியாக நகர நீர்ப் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
5. சுற்றுச்சூழலுக்கான அரசு சாரா நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியாவின் ஆய்வின்படி பல இந்திய நகரங்கள் நைட்ரஜன் ஆக்சைடை அதிகரிப்பதில் முக்கியப் பகுதிகளாக உள்ளன.
6. இந்தியாவின் முதல் யானை மறுவாழ்வு மையம் கேரள மாநில அரசால் அதன் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமமான கோட்டூரில் அமைக்கப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
7. ஸ்பெயினில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாத் 53 கிலோ எடைப் பிரிவில் நெதர்லாந்தின் ஜெசிகா பிளாஸ்கா என்பவரை வீழ்த்தி, தனது முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
8. ஸ்பெயினில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்ரன் என்பவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.