நடப்பு நிகழ்வுகள் ஜூன் 4, 2019






தேசிய செய்திகள் 

1. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 60 வயதை கடந்த சிறிய சில்லறை வணிகர்கள் (ம) கடைக்காரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3000-ஐ வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2. ரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (UNSC) தென் சூடானில் ஒரு ஆண்டுக்கு ஆயுதத்தடையை நீட்டியது.

3. இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) மின் சிகரெட் உட்பட மின்னணு நிகோடின் டெலிவரி அமைப்புகள் (ENDS) மீதான முழுமையான தடைக்கு பரிந்துரை செய்தது.

4. நீர்வள ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கை புனரமைத்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிக்கான அமைச்சகங்களை இணைத்து ஜல் சக்தி Jal Shakti என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார்

5. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் NSSO கடந்த 2017-18 ஆம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

6. முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவானது தேசிய கல்வி கொள்கை (NEP) திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை நிஷாங்கிடம் புது டெல்லியில் சமர்ப்பித்துள்ளது.

7. உலக சுகாதார அமைப்பு (WHO) ராஜஸ்தான் அரசாங்கத்தின் மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கு புகையிலைக்கான(Tabacco Control Award For year 2019) கட்டுப்பாட்டில் ராஜஸ்தான் சாதனைகளை அங்கீகரித்து 2019 ஆம் ஆண்டுக்கான புகையிலை கட்டுப்பாடு விருது வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

8. ஜீன்-1 சர்வதேச பால்தினமாக அனுசரிக்கப்படுகிறது.





Previous Post Next Post