உலக செய்திகள்
1. 2019 ஆம் ஆண்டு மே 27 அன்று கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின்(UN –Habitat Assembly)(UN –Habitat Assembly) ஒரு முழு அமர்வுச் சந்திப்பின் போது, அந்த அமைப்பின் நிர்வாக வாரியத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின் ஒரு சிறப்புக் கருத்துவானது “நகரங்கள் மற்றும் சமுதாயங்களில் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான புத்தாக்கம்” என்பதாகும்.
தேசிய செய்திகள்
2. ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.
3. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 75(1)ன் கீழ் தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்தியாவின் பிரதமராக மோடியை நியமிப்பார்.
4. இந்திய எழுத்தாளரான அன்னி சாய்டி ஒன்பது புள்ளிகள் பரிசை (Nine dots prize) 2019 ஆம் ஆண்டுக்காக பெற்றுள்ளார். அவர் தான் எழுதிய “ பிரட், சிமெண்ட், கேக்டஸ்” என்னும் புத்தகத்திற்காக பெற்றுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
5. சீனாவின் நானிங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் உலகக் கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியான சுதிர்மேன் கோப்பையை சீனா வென்றுள்ளது.
முக்கிய தினங்கள்
6. மே 29 - சர்வதேச ஐ.நா அமைதிப் படை வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.