நடப்பு நிகழ்வுகள் ஜூன் 3, 2019






உலக செய்திகள் 

1. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு மெக்ஸிகோவின் உயரிய விருதான “ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா” என்ற விருதை அளித்துள்ளது.

தேசிய செய்திகள் 

2. தமிழகத்தில் செயல்படும் சமூக நலத் துறை திட்டங்களில் பயன்பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தியது தமிழக அரசு.

3. சிறு குறு வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

4. “ஜல் சக்தி” என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஜல் சக்தி துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷேகாவட் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. புகையிலை தடுப்பிற்காக உலக சுகாதார அமைப்பின் விருதை ராஜஸ்தான் மாநில சுகாதார பிரிவு பெற்றுள்ளது.

6. இந்தியாவின் முதல் பெண் போர் விமானி மோகனா சிங் ஆவர். இவர் இந்திய விமானப் படையின் அதிநவீன போர் விமானத்தை தனியே இயக்கி, இந்திய விமானபடையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

7. இந்தியாவின் 24-வது கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்றுக் கொண்டார்.

வர்த்தக செய்திகள் 

8. இந்தியாவுக்கு அளித்து வந்த வர்த்தக முன்னுரிமை நாடுகள் என்ற அந்தஸ்த்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

9. தேசிய அளவிலான சப்-ஜுனியர் வலுதூக்கும் போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் பிரிவு சாம்பியன் பட்டம் வென்றது.

முக்கிய தினங்கள்

10. ஜுன் 2 தெலுங்கானா இந்தியாவின் 29-வது மாநிலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்.




Previous Post Next Post