உலக செய்திகள்
1. இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார்.
தேசிய செய்திகள்
2. மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒர்ச்சா நகரம் UNESCO-வின் பாரம்பரிய இடங்களின் தற்காலிக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது பந்திலா,(Bundeela)இராஜ வம்சத்தில் ஒரு கட்டடகலை பாணியால் உருவானதாகும்.
3. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MOSPI) கீழ் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மற்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று வெளியேறும் NDA அரசானது முன்மொழிந்துள்ளது.
4. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 73-ன் கீழ் தங்களால் வழங்கப்பட்ட அறிவிக்கையின் நகலை இந்தியத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
5. DRDO வால் புதியதாக மேம்படுத்தப்பட்ட தரையிலிருந்து விண்ணில் தாக்க கூடிய ஆகாஷ் என்னும் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
வர்த்தக செய்திகள்
6. தமிழ்நாடு மற்றும் கேரளா மொத்தம் 14 மாவட்டங்களில் “சக்கரங்களில் வங்கி” “Bank on Wheels” என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய ஓவர்சீஸ் வங்கி (IOB) அறிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
7. ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீரர் சௌரவ் சௌதரி, மகளிர் பிரிவில் ராஹி சர்னோபட் ஆகியோர் தங்கம் வென்றனர்