உலக செய்திகள்
1. இரண்டாவது ஷாங்கய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெகுஜன ஊடக மன்றம் கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
2. ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பிஜி ஜனதா-வின் தலைவரான நவீன் பட்நாயக் பதவி ஏற்றுள்ளார். இவர் ஒடிசாவின் 27வது அமைச்சரவையின் தலைவராவார்.
3. மக்கலு மலையை முதன் முதலாக ஒரு இந்திய பெண்ணான பிரியங்கா மொஹிட்டி ஏறி சாதனை புரிந்துள்ளார். இது உலகின் 5-வது மிக உயரமான மலை என்பது குறிப்பிடத்தக்கது.
4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ; (ISRO) தனது புதிய வணிக நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New space India Limited – NSIL) – ஐ பெங்களுரில் தொடங்கயுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
5. அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வகமான NASA, தனது “ஆர்டிமிஸ்” (Artemis) திட்டத்தை வெளியிட்டுள்ளது. இத்திட்டமானது நிலாவிற்கு மனிதர்களை 2024 ஆண்டுக்குள் அனுப்பும் திட்டமாகும். இதன் ஆளில்லா சோதனை முயற்சியான “ஆர்டிமிஸ் – I” 2020-க்கும் செயல்படுத்தப்படும்.
வர்த்தக செய்திகள்
6. GST இல் பதிவு செய்த MSME நிறுவனங்களுக்காக கார்ப்பரேஷன் வங்கி “கார்ப் SME சுவிதா” (Corp SME Suvidha) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளனர்.
7. கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட மசாலா பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலம் பன்னாட்டுச் சந்தையை அணுகும் நாட்டின் முதல் துணை இறையாண்மை நிறுவனமாக கேரளா மாறியுள்ளது.
முக்கிய செய்திகள்
8. மே 25 ஆம் நாள் உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.