நடப்பு நிகழ்வுகள் மே 27, 2019






உலக செய்திகள் 

1. நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும்“சாஹீன்- II”  என்ற ஏவுகனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது. இது மீயொலி வேகத்தில் செயல்படும். மேலும் 1500 முதல் 2000 கி.மீ வரை உள்ள இலக்குகளைத் தாக்கும்.

2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

3. வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு, சர்வதேச அளவில் 415 ppm என்ற அளவை கடந்துள்ளது

தேசிய செய்திகள் 

4. தமிழ்நாட்டில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 61- வது வருடாந்திர பழக் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது.

5. நடந்து முடிந்த 17- வது மக்களவைக்கான தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க ராம்நாத் கோவிந் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் 14- வது பிரதமராக மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். 17- வது மக்களவை எதிர்கட்சி தலைவர் இல்லாமல் செயல்பட விருக்கிறது

6. அஸ்ஸாம் ரைபில்ஸ் (ம) இந்தியக் கடலோரக் காவல் படை இடையே இணைப்பு பட்டய ஒப்பந்தம் கையெழுத்தானது.

வர்த்தக செய்திகள் 

7. இஸ்ரோ, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(New Space India Limited) என்ற புதிய வணிக நிறுவனத்தை பெங்களுருவில் தொடங்கியுள்ளது

முக்கிய தினங்கள் 

8. மே 26 சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.



Previous Post Next Post