உலக செய்திகள்
1. நைஜரின் தலைநகரமான நியாமியில் நடைபெறவிருக்கும் ஆப்பிரிக்க யூனியன் (AU) உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக ஆதரவாக இந்தியா முதன்முறையாக நைஜருக்கு 15 மில்லியன் டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளது
2. கிரின்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2030க்குள் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனைக்கு தடை விதிக்க அயர்லாந்து அரசு முடிவு செய்தது.
3. உலக சுகாதார நிறுவனம் (WHO) “AdoptAWaRe நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கவனமாகக் கையாளுங்கள்” என்ற உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
தேசிய செய்திகள்
4. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
5. இந்தியாவின் சிறிய நகரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய குறைந்த விலையில், பிறந்த குழந்தை சுவாச சாதனத்தை கண்டுபிடித்த இந்திய பொறியாளரான நிதேஷ் குமார் ஜாங்கிர், லண்டனில் 2019 காமன்வெல்த் பொதுச்செயலாளரின் கண்டுபிடிப்புக்கான நிலையான மேம்பாட்டு விருதை வென்றுள்ளார் (Commonwealth Secretary- General’s Innovation for Sustainable Development Award).
6. பத்திரிக்கைத் துறையில் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாக செலுத்தியதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தைச் சேர்ந்த 29 பத்திரிக்கையாளர்களுக்கு மாத்ரி ஸ்ரீ ஊடக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
வர்த்தக செய்திகள்
7. கடந்த ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளின் மந்தநிலை காரணமாக நடப்பு நிதியாண்டில் (FY20) இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.8மூ முதல் 6.6% ஆக Fitch ஃபிட்ச் குறைத்தது