உலக செய்திகள்
1. NDMA, குஜராத்தின் காண்டலாவில் உள்ள டீன் தயால் போர்ட் டிரஸ்டில் ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது. இது CBRN (Chemical, Biological, Radiological and Nuclear – வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் துறைமுக அவசர கையாளர்களை (SEHs) தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
2. 2019-ல் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார். போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ஆம் இடம் பெற்றார். டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்ணாக ஆவார்.
தேசிய செய்திகள்
3. மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு (National People’s Party NPP) இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சியின் நிலையை வழங்கியது
4. குஜராத்தில் உள்ள லோதாலில் உள்ள பண்டைய ஹரப்பான் நாகரிகத்திற்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகம் அமைப்பதற்கு போர்ச்சுகலுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது
5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார். நியா டோனி என்ற அந்தச் சிறுமி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதக் கழிவுகளை சேகரித்தற்காக கௌரவிக்கப்பட்டார்.
விளையாட்டு செய்திகள்
6. 2019 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபனின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவவைச் சேர்ந்த ஆஸ்லே பார்டியும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர்.