உலக செய்திகள்
1. உலகப் போட்டித்திறன் தரவரிசை 2019 ல், இந்தியா 43 வது இடத்தைப் பிடித்தது, இது சர்வதேச அபிவிருத்தி முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் (International Institute for Management Development) தொகுத்தது. சிங்கப்பூர் முதலிடம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
2. காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ‘ஹவா ஆனை டி’ ‘Hawa Aane De’ என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தேசிய செய்திகள்
3. ஒரு தனித்துவமான மரங்களை பாதுகாக்கும் மற்றும் மரங்களை நடும் முயற்சியாக “மரம் ஆம்புலன்ஸ்” (Tree Ambulance) என்னும் சேவையை தமிழகத்தின் சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவங்கி வைத்தார்.
4. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீ நகரில் வி. ஆர். வி ஆசிய பசிபிக் உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு தொட்டி இஸ்ரோ தலைவர் கே. சிவன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
5. இந்திய விமானப்படை (IAF) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) உடன் 2022 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட ககனயன் திட்டத்திற்காக பயிற்சிக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
6. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பெமா காந்து அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.
முக்கிய தினங்கள்
7. மே 29 - சர்வதேச எவரெஸ்ட் தினம் அனுசரிக்கப்படுகிறது.