உலக செய்திகள்
1. அமெரிக்க ஜனாதிபதியான டோனால்ட் ஃட்ரம்ப், அந்நாட்டின் மிக உயரிய விருதான, சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கதினை (Presidential medal of freedom) அந்நாட்டின் நட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ்க்கு வழங்கினார்.
தேசிய செய்திகள்
2. உலக புகழ்பெற்ற சர்தாம் யாத்ரா கங்கோதரி மற்றும் யமுநோதரி யாத்ரீகர்களுக்காக உத்தர்கண்டில் தொடங்கியது
3. பின்லாந்தின் ரோவனிமி, லப்பி ஆரேனாவில் 11 வது ஆர்ட்டிக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
4. குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (ஜிஎன்எல்யூ) புதிய இயக்குநராக முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சர்வதேச அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பின் தொடரப்படும் மனிதர்களின் பட்டியலில் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி 2வது இடத்தில் உள்ளார்.மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதலிடத்தில் உள்ளார்.
6. Game Changer என்ற புத்தகத்தை ஷாகித் அப்ரிடின் என்பவர் எழுதியுள்ளார்.
7. உன்னத் பரத் அபியின் திட்டதின் கீழ் IIT - கான்பூர் இணைந்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. போலந்து தலைநகரான வார்சாவில் நடைபெற்ற 36 ஆவது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர்கள் கௌரவ் சோலங்கி, மணீஷ் கௌசிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
முக்கிய தினங்கள்
9. மே 8 - உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள். இதன் மையக்கருத்து “# அன்பு” என்பதாகும்
10. மே 8 - உலக தலசீமியா தினம். இதன் மையக்கருத்து: “அனைவருக்கும் தரமான தலசீமியா சுகாதார சேவைகள்: நோயாளிகளுக்காக நோயாளிகளுடன் இணைந்து செயல்படுதல்”.