உலக செய்திகள்
1. 9 வது இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா (IBSA) ஷெர்பாஸ் கூட்டம் கோச்சினில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
2. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பிற்க்கு 10 “காமோவ் கா-31” (Kamov ka – 31) என்னும் வான்வழி ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
3. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுசூழல் அமைச்சர்கள் பங்குபெறும் G7 கூட்டம் பிரான்ஸின் மெட்ஸில் நடைபெற்றது.
4. INS வேலா என்ற ஸ்கார்பியன் நீர்முழ்கிக் கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் நடைபெற்றது.
5. பனாமாவின் புதிய அதிபராக லௌரன்டினோ கோர்ட்டிஸ்சோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. யாஹூ(Yahoo) தேடுபொறி இணையத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். மேலும் ப்ரியங்கா காந்தி இரண்டாம் இடத்திலும் மம்தா பானர்ஜீ மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
7. கேரளா மாநிலத்தின் நீர்நில வாழ் உயிரினமாக பர்ப்ள் தவளை(மார்வேலி தவளை) அறிவிக்கப்பட்டுள்ளது.
8. VK கிருஷ்ணமேனன் விருது தென் ஆப்பிரிக்காவின் GD ராபர்ட் கோவேந்தர் என்பவருக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
9. ஜப்பானின் தனியார் அமைப்பான இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar) டெக்னாலஜி அதனுடைய முதலாவது ராக்கெட்டான “மோமோ-3” (Momo – 3) ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
10. மோமோ 3 என்ற ராக்கெட்டை ஜப்பானை சேர்த்த இண்டெர்ஸ்டெல்லர் என்ற நிறுவனம் தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
11. ஏடிபி தரவரிசை பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் முதலிடத்திலும் ஸ்பெயின்னின் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்திலும் ரோஜர் பெடரர் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.