உலக செய்திகள்
1. லைபீரியாவை சேர்ந்த ஆல்பிரெட் பிரௌனெல் கோல்டுமேன், 2019 ஆம் ஆண்டிற்கான சுற்றுசூழல் பரிசை வென்றுள்ளார்.
2. லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் 24 மணிநேரத்தில் அதிக தேசிய கொடிகளை(26,852) ஏற்றி உலகளவில் புதிய கின்னஸ் சாதனையை புரிந்துள்ளது.
தேசிய செய்திகள்
3. தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் 13 வது உறுப்பினராக நீதிபதி M வேணுகோபால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் இதில் 18 தொழில்முறை உறுப்பினர்கள் உள்ளனர்.
4. இந்தியாவில் திட கழிவு அழிப்பில் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலம் 84% திடக்கழிவுகளை அழித்துள்ளது.
5. பானி புயலினால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு தமிழக அரசு 10 கோடி நிவாரண நிதி அளிக்கவுள்ளது.
6. நேபாள நாட்டை சேர்ந்த 18 வயதான பந்தனா என்ற பெண் தொடர்ந்து 126 மணி நேரம் இடைவிடாது நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
7. மங்களூரு காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கையாள பெண்கள் மட்டுமே உள்ள ராணி அபாக்கா படை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
8. 2018-19 ஆம் நிதியாண்டில் சுமார் 6.68 கோடி மக்கள் தங்களின் வருமான வரி கணக்குகளை இணையம் மூலமாக தாக்கல் செய்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
9. அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான SPACEX கார்கோ மிஷன் என்ற திட்டத்தை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட மின்சாரா தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்ய தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
10. இந்திய வில்வித்தை கூட்டமைப்பில் இருந்து BVP ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தர்.
11. நியூசிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டி 2019 இல் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அன் சி யாங் சாம்பியன் பட்டம் வென்றார்.
12. நியூசிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டி 2019 இல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோனாதன் கிறிஸ்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய தினங்கள்
13. மே 4 - நிலக்கரி சுரங்க தினம்
இரங்கல்
14. அமெரிக்காவை சேர்ந்த நீதிபதியான டாமன் ஜே . கீத் காலமானார்.