நடப்பு நிகழ்வுகள் மே 5, 2019








உலக செய்திகள் 

1. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கவுள்ளது. 

2. தாய்லாந்தின் 10-வது மன்னராக வஜ்ராலங்கரண் முடி சூட்டிக்கொண்டார்.

3. அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம் விருது கோல்ப் வீரரான டைகர் உட்ஸ்(அமெரிக்கா) என்பவருக்கு வழங்கப்பட்டது.

தேசிய செய்திகள் 

4. இந்தியா 2017-28 ஆம் ஆண்டில் லண்டனில் அதிக அந்நிய நேரடி முதலீட்டை செய்துள்ளது.

5. இந்திய கடற்படையில் இருந்து INS ரஞ்சித் ஓய்வு பெற்றது. இந்த போர் கப்பல் 36 ஆண்டுகளாக தனது பணியை வெற்றிகரமாக செய்துள்ளது.

6. அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய போட்டியில் தமிழ் மொழிக்கான நெடும் படைப்புப்பிரிவில் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில் பாலன் வெற்றிபெற்றுள்ளார்.  இவர் பரங்கிமலை இரயில் நிலையம் என்ற படைப்பிற்காக தேர்வாகியுள்ளார்.

7. வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தனது திறனை அதிகரிக்க ரஷ்யாவிடம் இருந்து  3600 கோடி ரூபாய் செலவில் காமோ – 31 (kamov – 31) ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

8. ஆசிய கல்லூரி இதழியல் விருது(Asian College of journalism Award) நைலேனா MS (Nileena MS) என்பவருக்கு கோல்கேட் 2.0 என்ற இதழுக்காக வழங்கப்பட்டது.

9. உலக பத்திரிகை சுதந்திர விருது வா லோனே மற்றும் க்யாவ் சோ ஓ(Wa Lone and Kyaw Soe Oo) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வர்த்தக செய்திகள் 

10. இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் 15-வது நிதிக்குழுவின் 12வது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த குழு 12 உறுப்பினர்களை கொண்டது.

விளையாட்டு செய்திகள் 

11. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றள்ளார்.

12. இந்திய தேசிய வாலிபால் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செர்பியாவை சேர்ந்த டிராகன் மிகைலோவிச் நியமிக்கப்பட்டுள்ளார்.

13. ICC T20 போட்டியில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பாக்கிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

முக்கிய தினங்கள் 

14. மே 5 - ஜெர்மானியை சேர்ந்த தத்துவ ஞானி கார்ல் மாக்ஸ் பிறந்த தினம்.

15. மே 2 - உலக டூனா தினம் 





Previous Post Next Post