தேசிய செய்திகள்
1. நாட்டின் முன் மாதிரி துறைமுகமான காமராஜர் துறைமுக பங்குகளை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
2. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 8.65 சதவீதம் அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.
3. இந்தியா, சீனாவின் பால் மீதான தடையை நீட்டித்துள்ளது. இந்த தடை 2008 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்துவருகிறது.
விளையாட்டு செய்திகள்
4. உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
5. பெய்ஜிங்-கில் போட்டி நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்.
6. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வார், அஞ்சும் மவுத்கில் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்.
7. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர், சவுரப் சவுத்திரி ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்.
8. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளி பதக்கம் வென்றார்.
முக்கிய செய்திகள்
9. ஏப்ரல் 27 - தென் ஆப்பிரிக்காவின் விடுதலை தினம் (சுதந்திர தினம்)