நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 27, 2019








உலக செய்திகள் 

1. 5வது ஆசிய பசிபிக் ஒளிபரப்பு ஐக்கியத்தின (ABU) காலநிலை நடவடிக்கை மற்றும் பேரழிவின் முன்னேற்பாடு பற்றிய உச்சிமாநாடு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது. கருத்துரு : “நிலையான எதிர்காலத்திற்கான ஊடக தீர்வுகள் : வாழ்வாதாரங்களை காப்பாற்றுதல், வசதியான சமூகங்களை உருவாக்குதல்”(Media Solution for Sustainable future : saving lives, Building Resilient Communities)

தேசிய செய்திகள் 

2. இணையதள ஊடுருவிகள் (hackers) அதிகமாக ஊடுருவ முயற்சி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது என்று அகமய் தொழில்நுட்ப அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


3. இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையில் இருக்கும் 70 ஆண்டு உறவை நினைவு கூறும் வகையில் இராமாயணத்தின் சிறப்பம்சத்தை கொண்ட தபால் தலையை இந்தோனேஷியா அரசு வெளியிட்டுள்ளது.


4. 5வது ஆசிய பசிபிக் ஒளிபரப்பு ஐக்கியத்தின (ABU) காலநிலை நடவடிக்கை மற்றும் பேரழிவின் முன்னேற்பாடு பற்றிய உச்சிமாநாடு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது. இதன் கருத்துரு : “நிலையான எதிர்காலத்திற்கான ஊடக தீர்வுகள் : வாழ்வாதாரங்களை காப்பாற்றுதல், வசதியான சமூகங்களை உருவாக்குதல்” (Media Solution for Sustainable future : saving lives, Building Resilient Communities).

5. 2019ம் ஆண்டிற்கான ரபீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது, 2010ம் ஆண்டு எழுதப்பட்ட “சோலோ” (solo) என்னும் நாவலின் ஆசிரியரான ராணா தாஸ்குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

6. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் தென்கொரியாவின் கிம் இங்குவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

7. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 81 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி சீனாவின் வாய் லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

முக்கிய தினங்கள் 

8. ஏப்ரல் 26 - உலக அறிவுசார் சொத்துரிமை தினம். இதன் கருத்துரு “தங்கத்தை இலக்காக கொள்: அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டுகள் (Reach for Gold “ IP and Sports).








Previous Post Next Post