உலக செய்திகள்
1. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா நகரங்களுக்கு இடையே, புதிய அதிவேக புல்லட் ரெயிலை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய செய்திகள்
2. மிகவும் அரிதான முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கு பயன்படும் ‘ஒன்செம்னோஜன் சொல்ஜென்ஸ்மா’ தான் விலை உயர்ந்த மருந்து ஆகும். இந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி) விற்பனைக்கு வந்துள்ளது.
3. மூன்றவாது பெரிய விமான நிறுவனமாக உருவெடுத்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் 737 ரக விமானத்தை புதிதாக வாங்கி இருக்கிறது.
4. பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.
வர்த்தக செய்திகள்
5. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 205 கோடி டாலர் (ரூ.14,350 கோடி) குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7. தொழிற்முறை ஸ்குவாஷ் கூட்டமைப்பு (பிஎஸ்ஏ) சேலஞ்சர் டூர் போட்டியான செகிசுயி ஓபனில் இந்திய வீரர் மகேஷ் மங்காவன்கர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
8. மொனாகோ கிராண்ட்பிரிக்ஸ் கார்பந்தய போட்டியில் பிரிட்டன் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.