நடப்பு நிகழ்வுகள் மே 23, 2019







உலக செய்திகள் 

1. ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு - 2019 கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கெக் என்ற இடத்தில் நடைபெற்றது.

2. புளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

தேசிய செய்திகள் 

3. 1,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட ‘சாகின் 2’ ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

4. இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் “ட்ரீ ஆம்புலன்ஸ்” எனும் புதுமையான திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனித ஆபத்துக்களால் பாதிக்கப்பட்ட மரங்களை மீட்டு பசுமையை பாதுகாக்க முடியும்.

விளையாட்டு செய்திகள் 

5. மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

6. பெங்களூரு டிசிஎஸ்(TCS) உலக 10K மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் எத்தியோபியாவை சேர்ந்த போலிஹி சாம்பியன் பட்டம் வென்றார்.

முக்கிய தினங்கள் 

7. மே 23, சர்வதேச ஆமைகள் தினம் 




Previous Post Next Post