நடப்பு நிகழ்வுகள் மே 21, 2019








தேசிய செய்திகள் 

1. தேர்தல் விளம்பரத்திற்காக அதிகம் செலவு செய்த கட்சிகளின் பட்டியலில் பிஜேபி முதலிடத்தில் உள்ளது.

2. பெங்களூரு டிசிஎஸ்(TCS) உலக 10K மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் எத்தியோபியாவை சேர்ந்த போலிஹி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் கென்யாவின் ட்ரோப் சாம்பியன் பட்டம் வென்றார்.

3. சமூக வலைத்தளங்களில் அதிக மக்களால் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில்  வீராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவரை 10 கோடி மக்கள் பின்தொடருகின்றனர். மேலும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக பின் தொடரப் படுபவர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

4. ரயில்வே 2020 ஆம் ஆண்டிற்குள் 1000 மெகா வாட் சோலார் காற்றாலையை நிறுவி மின்சாரம் தயாரிக்கவுள்ளது.

5. இந்தியா சமீபத்தில் mi-24 என்ற இரண்டு ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வழங்கியுள்ளது.

6. JFK Profile in Courage விருது நான்சி பெலோஷி (Nancy Pelosi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்க்காக வழங்கப்படுகிறது.

7. ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு திரை அமைச்சர்கள் மாநாடு கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கெக் என்ற இடத்தில் நடைபெற்றது.

8. இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதுவராக மொயினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

9. இத்தாலி சிரி ஏ கால்பந்து 2019 போட்டியின் சிறந்த வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருக்கு வழங்கப்பட்டது.

10. இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நாடல் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலினா பிரிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.




Previous Post Next Post