உலக செய்திகள்
1. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 23வது முறையாக ஏறி கமி ரிதாஹெர்பா உலகசாதனை படைத்துள்ளார். இவர் நேபாள நாட்டை சேர்ந்தவர்.
தேசிய செய்திகள்
2. இந்திய முப்படைகளின் -பயிற்சி அந்தமான் நிகோபார் தீவில்தெரசா ஐஸ்லாந்தில் நடைபெற்றது.
3. இந்திய இராணுவ விண்வெளி முகாமை பெங்களுருவில் அமைக்கப்படவுள்ளது.
4. அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை ஆரோஹி பண்டிட் பெற்றுள்ளார். இவர் லைட் ஸ்போர்ட் என்ற விமானத்தில் கடந்துள்ளார்
5. NMCG, INTACH உடன் இணைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் 10,000 ருத்ராட்சம் மரங்களை நடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நமாமி கங்கா திட்டம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
6. 5வது இந்திய கடற்படையின் சேவை தேர்வு வாரியம் கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது.
7. இந்தியாவில் முதல் முறையாக லெகனொகிரிஸ் டாய்வானியா என்ற புதிய வகை பூ அஸ்ஸாமில் கண்டறியப்பட்டுள்ளது.
8. ஆசிய சிங்கத்தின் மரபணுக்களை CSIR மற்றும் CCMB நிறுவன ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
9. லோக்பால் அமைப்பிற்காக புதிய இணைய தளமான http://www.lokpal.gov.in - ஐ பினாகி சந்திர கோஷ் தொடங்கிவைத்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
10. 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.