நடப்பு நிகழ்வுகள் மே 16, 2019








உலக செய்திகள் 

1. நெட்வொர்க் குறுக்கீட்டின் (OONI) திறந்த ஆய்வுக்கூடம் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனா அனைத்து மொழி பதிப்புகளையும் உள்ளடக்கிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா விக்கிபீடியாவை தடை செய்தது.

தேசிய செய்திகள் 

2. இந்திய நாட்டின் 35 சதவீத கிராஃபைட் வைப்புக்கள் அருணாச்சல பிரதேசத்தில் காணப்படுகின்றன என்று இந்தியாவின் புவியியல் ஆய்வு [GSI] மையம் தெரிவித்துள்ளது.

3. இந்திய ரிசர்வ் வங்கி தனது முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தியை யெஸ் வங்கியின்(YES Bank) கூடுதல் இயக்குநராக நியமனம் செய்துள்ளது.

4. பேரழிவு குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதிகளின் (GFDRR) ஆலோசனைக் குழுவிற்கு (CG), 2020 நிதியாண்டிற்கான இணைத் தலைவராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

5. தமிழக அரசு பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதி குறிப்பிட தடை விதித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் எமிஸ் இணையதளம் வழியாக அச்சிடப்பட்ட மாற்றுச்சான்றிதழில் வழங்கப்படவுள்ளது.

6. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள் 

7. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, வர்த்தகமும், பொருட்களும் இணைந்து, 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

8. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை G. S லட்சுமி, ஐசிசி–யின் போட்டி நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

9. இந்திய ஆடவர் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குரோஷியா நாட்டை சேர்ந்தவர்.

முக்கிய தினங்கள் 

10. மே 15 – சர்வதேச குடும்ப தினம். இதன் கருத்துரு “Families and Climate Action: Focus on SDG 13.






Previous Post Next Post