நடப்பு நிகழ்வுகள் மே 15, 2019






உலக செய்திகள் 

1. தலியானில் 052டி ரகத்தைச் சேர்ந்த 2 ஏவுகணை தாங்கி போர் கப்பல்களை சீனா, தனது கடற்படையில் சேர்த்துள்ளது.

தேசிய செய்திகள் 

2. ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.என்.படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆர்.எஸ்.செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஏ.ஏ.குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

6. எதிரி நாட்டு விமானங்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அப்யாஸ்(ABHYAS) ஆளில்லா விமானத்தை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒடிஷாவின் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

7. ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.  இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம்  வென்றுள்ளார்.

8. மன்னார் வளைகுடாவில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

9. ITC நிறுவனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ் பூரி நியமிக்கப்பட்டுள்ளார். ITC யின் முன்னாள் தலைவர் YC தேவேஸ்வர் காலமானதால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

10. ஆசிய நாகரிக உரையாடல் மாநாடு - 2019 (CDAC - conference on dialogue of asian civilisation) பெய்ஜிங், சீனாவில் நடைபெற்றது. 

வர்த்தக செய்திகள் 

11. LIC பரஸ்பர நிதியத்தின் (LIC mutual fund) தலைமை நிர்வாக அதிகாரியாக தினேஷ் பாங்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

12. IPL 2019 கிரிக்கெட் போட்டியில் நேர்மையான விருது ஹைத்ராபாத் சன் ரைசஸ் அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மைதானத்திற்கான விருது ராஜிவ் காந்தி மைதானத்திற்கும் பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்திற்கும் வழங்கப்பட்டது.







Previous Post Next Post