தேசிய செய்திகள்
1. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உள்ள பங்குதாரர்களுக்காக 'சின்டான் பாத்' என்ற அமர்வை தொடங்கியுள்ளது.
2. சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உறுப்பினராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா என்ற பெண் இரண்டாவது முறையாக மறுதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. குஜராத் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த S சாந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. பசவ ஜெயந்தி கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
5. இந்திய தேர்தல் ஆணையம் திரிபுரா மாநிலத்தில் உள்ள 168 வாக்குசாவடிகளுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது.
6. ஈரான் அரசு விரிவான கூட்டு நடவடிக்கை திட்டதின் (JCPOA) ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இது ஒரு அணு ஆயுத ஒப்பந்தம்.
7. இந்தியாவின் ஐந்தாவது பழுப்பு நிற பிட் வைப்பர் பாம்பு சிவப்பு நிற சாயலுடன் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு ஒரு தனித்துவமான வெப்ப உணர்திறன் அமைப்பு கொண்ட விஷப் பாம்பு ஆகும்.
8. விவசாயத்தில் ஆற்றல் பயன்பாட்டை திறம்பட பயன்படுத்துவதற்காக TAFE (டிராக்ட்டர்கள் மற்றும் பண்ணை உபகரண லிமிடெட்) மற்றும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (PCRA) இடையே ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
9. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஒவ்வொரு மாதமும் 6வது நாளை 'பாதுகாப்பு தினம்' ஆக அறிவித்துள்ளது. இதன் நோக்கம் நிதி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
10. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனையாகத்தை மும்பையில் தொடங்கவுள்ளது.
இரங்கல்
11. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனரான பைத்யநாத் மிஷ்ரா காலமானார்.