உலக செய்திகள்
1. பாதுகாப்பு துறை பற்றிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு க்ரிக்கிஸ்தானில் நடைப்பெற்றது
2. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
3. இந்தியா மற்றும் புரூனேய் இடையே வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
4. கத்தார் அரசு 2019 இறுதிக்குள் அனைத்து எக்ஸிட் விசா(Exit Visa) முறையையும் தடைசெய்ய உள்ளது.
தேசிய செய்திகள்
5. இந்தியாவில் பாரதி ஸ்கிரிப்ட் என்ற புதிய எழுத்து முறையை 9 மொழிகளில் ஐஐடி மெட்ராஸ்(IIT - Madras) அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது இந்தியாவின் ஒரு பொதுவான எழுத்து வடிவமாக பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
6. கேரளாவின் விழிஞ்சியம் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் L & T நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இடைமறிப்பு கப்பலான "ICGS C-441" இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
7. இலங்கையில் பொது இடங்களில் பர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
8. அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின்(AIFF) தொழில்நுட்ப இயக்குனராக டோறு இசாக்(Doru Isac) நியமிக்கப்பட்டுள்ளார்.
9. POLITICS OF JUGAAD: THE COALITION HANDBOOK என்ற புத்தகத்தை சபா நாக்வி(Saba Naqvi) என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
10. செசெல்ஸ் நாட்டிற்கான இந்தியாவின் கூடுதல் ஆணையராக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
11. ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உயர் நுண் உணர்வியான குவாண்டம் வெப்பநிலைமானி உருவாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
12. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீம் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
13. லா லிகா(ஸ்பெயின் கால்பந்து லீக்) கால்பந்து போட்டியில் பார்சிலோனா கால்பந்து அணி லெவன்டி கால்பந்து அணியை வீழ்த்தி பட்டம் பெற்றது.
14. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 8 பதக்கங்களுடன்(3 தங்கம்,1வெள்ளி, 4 வெண்கலம்) இந்தியா முதலிடத்திலும் 5 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
முக்கிய தினங்கள்
15. மே 1 - சர்வதேச தொழிலாளர் தினம். இதன் கருத்துரு: அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம் என்பதில் சமூக பங்குதாரர்களின் பங்கு என்பதாகும்.