உலக செய்திகள்
1. ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ராணிக் யோகேந்த்ரா என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
2. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
3. குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க “கருகலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த மதுரை கிளை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. தலைமை நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி, எஸ்.ஏ.போப்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக எஸ்.ஏ.போப்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
5. ஆல் இந்திய ரேடியோ நிறுவனத்துக்கு ஸ்வாச்ஹட பக்ஹ்வாடா(Swachhata Pakhwada) விருது ஸ்வச் பாரத் மிஷனுக்கு கீழ் வழங்கப்பட்டுள்ளது.
6. இந்தியாவின் முதல் சுரங்க மீன் அருங்காட்சியகம் சென்னையில் உள்ள VGP பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
7. 2018 – 19ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 7.97 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வணிகத் துறை தெரிவித்து உள்ளது.
8. தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க, பல்வேறு அரசு அமைப்புகளிடம், மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
9. கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு. சித்ரா 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்
10. சீனாவின் ஸியான் நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தன்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.
11. சீனாவின் ஸியான் நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
12. சீனாவின் ஹாங் காங் நகரில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்ட்டிங் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆர்த்தி அருண்(தமிழ்நாடு) தங்கம் வென்றார்.
முக்கிய தினங்கள்
13. ஏப்ரல் 24 - மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாளாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இதன் கருத்துரு: “பேரழிவு மேலாண்மையில் பஞ்சாயத்துகள்”.
14. ஏப்ரல் 25 - சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம். கருப்பொருள்: “ஜீரோ மலேரியா என்னுடன் தொடங்குகிறது” (Zero malaria starts with me).
15. ஏப்ரல் 25 - வானொலியை கண்டுபிடித்த மார்க்கோணி பிறந்த தினம்.