நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 22, 2019










உலக செய்திகள் 

1. சீன கடற்படையின் 70- ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி நடைபெறும் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் கலந்து கொள்வதாக இந்தியாவில் இருந்து ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஆயுதக்கிடங்காக செயல்படும் ஐஎன்எஸ் சக்தி ஆகிய கப்பல்கள் சீனாவின் குயிங்டோ துறைமுகத்துக்கு வந்துள்ளன.

2. உக்ரைன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகராக நடிக்கும் வோலோடிமிர் செலென்ஸ்கி(Volodymyr Groysman) என்பவர் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த இவாமோட்டா என்ற பார்வையற்ற மாலுமி முதல்முறையாக பசுபிக் கடல் பயணத்தை இரண்டே மாதத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

வர்த்தக செய்திகள் 

4. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இரு சக்கர வாகனங்களுக்கு  காப்பீட்டு வழங்கவுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

5. அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மணியம்மையார் சாட் என்ற செயற்கைக்கோள் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் பொறியியல் மாணவியரால் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

விளையாட்டு செய்திகள் 

6. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னி சாம்பியன் பட்டம் வென்றார்.





Previous Post Next Post