நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 17, 2019





தேசிய செய்திகள் 

1. கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்யா முதல் மெய்நிகர் யதார்த்த மையத்தை (VRC) கடற்படை வடிவமைப்பு (மேற்பரப்பு கப்பல் குழு) இயக்குநரகத்தில் தொடங்கி வைத்தார்.

2. 2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது.

3. டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் இணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. ரங்காலி  பிஹு (Rongali Bihu) என்றழைக்கப்படும் போஹாஃ பிஹு (Bohaag Bihu) திருவிழா அஸ்ஸாமில் கொண்டாடப்பட்டது.


5. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சுகாதார மற்றும் பாதுகாப்புக்குழு தலைவராக பீபு கல்யாண் நாயக்(Bibhu Kalyan Nayak) நியமிக்கப்பட்டுள்ளார்

6. பாதுகாப்புத்துறை நிதி செயலாளராக கார்கில் கவுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. ஈர நிலங்களை பாதுகாக்க இஸ்ரோ நிறுவனம் Central Marine Fisheries Research Institute (CMFRI) உடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

8. போர்க்கப்பலை வடிவமைக்கும் VRC நிறுவனம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

9. இந்தியாவில் உள்ள 543  மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகள் தனி தொகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

10. நபீஸா என்ற திருநங்கை மிஸ் கூவாகம் என்ற பட்டம் வென்றார்.

11. பருவநிலை மாற்றம் மற்றும் கடலோர பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான ஆய்வு மையம் ஐஐடி - சென்னையில் (IIT - Chennai)  தொடங்கப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள் 

12. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 3.88 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

13. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறந்த இந்திய வங்கிகள் - 2019 பட்டியலில் HDFC வங்கி முதலிடத்தில் உள்ளது

விளையாட்டு செய்திகள் 

14. சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2019 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கென்டோ மோமோட்டா இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் “தாய் சுசு யீங்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

15. மெர்ல்போன்  கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர்களாக இன்சமாம் உல் ஹக்கும் மார்க் பௌச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்

முக்கிய தினங்கள் 

16. ஏப்ரல் 15 - தமிழக அரசு திருநங்கைகள் தினமாக அறிவித்துள்ளது.

இரங்கல் 

17. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுப்பாட்டு மையம் (ISAC) முன்னாள் இயக்குனரான  எஸ்.கே. சிவகுமார் (66) கர்நாடகாவில் காலமானார்





Previous Post Next Post