நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 15, 2019




உலக செய்திகள் 

1. அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி – 2019ன் (ADIBF – 2019) கௌரவ விருந்திரனராக இந்தியா கலந்துகொள்ள உள்ளது.

2. 2019-ஆம் மட்டின் உலக புகைப்பட விருது ஜான் மூர்(John Moore) என்பவருக்கு சிறிய அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் படத்திற்காக (An image of a little girl crying) வழங்கப்பட்டது. மேலும் பீட்டர் டென் ஹூப்பென்(Pieter Ten Hoopen) "2019-ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படக் கதை" விருதை வென்றார்

தேசிய செய்திகள் 

3. PayU, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த விப்மோ(Wibmo) நிறுவனத்தை 70 மில்லியன் டாலர்-க்கு வாங்கியுள்ளது.

4. சிறந்த டிஜிட்டல் ஏஜென்சி விருது சுதன்சு குமாருக்கு வழங்கப்பட்டது.

5. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரம்புதூர் உள்ளது.

6. ஐ.நா வெளியிட்ட அறிக்கை படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 1.2 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.மேலும் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.

7. மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சஞ்சீவ் சர்மா(Sanjeev Sharma) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. மகாத்மா காந்தி அந்தரராஷ்ட்ரிய ஹிந்தி விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ரஜனீஷ் குமார்(Rajaneesh Kumar) நியமிக்கப்பட்டுள்ளார்.

9. டாடா டிரஸ்ட் மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் இணைந்து இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள கைத்தறி கொத்தளங்களை ஒருங்கிணைத்து டிஜிட்டல் சமுதாயத்தை கட்டமைப்பதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வர்த்தக செய்திகள் 

10. G-20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் வாஷிங்டன், டி.சி-யில் நடைபெற்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

11. இந்திய தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) ஆனது கூகிள் கிளவுட் உடன் இணைந்து  தொழில் சார்ந்த மென்பொருள் கட்டமைப்பை உருவாகியுள்ளன.

முக்கிய தினங்கள் 

12. 64வது இரயில்வே வார விழா ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது.






Previous Post Next Post