நடப்பு நிகழ்வுகள் மார்ச் 9, 2019

உலக செய்திகள் 
1. உலக சுகாதார அமைப்பின் தலைவராக சவுமியா சுவாமிநாதன்(தமிழ்நாடு) நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள் 
2. உலக மகளிர் தினத்தையொட்டி மத்திய பிரதேசத்தில், ரயில் ஓட்டுநர் முதல், டிக்கெட் பரிசோதகர் வரை அனைவரும் பெண்களாக பணியமர்த்தப்பட்டு போபால் - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
3. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவன விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்கிவுள்ளனர்
4. சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளது.
5. மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களும் எளிதில் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
6. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA – International Energy Agency) 125வது உறுப்பினராக இணைவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
7. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில், இந்தியா சேர்ந்த 44 பெண் சாதனையாளர்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
8. ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக பத்மலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
9. பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வரும் சுபாஷ் சந்திர கார்க் தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள் 
10. உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது
விளையாட்டு செய்திகள் 
11. இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த P. இனியன் (16) பெற்றுள்ளார்.
12. மெக்சிகோவின் பிரின்சஸ் முண்டோ இம்பிரியலில் நடைபெற்ற 2019ம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கியர்கியோஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஜெவ்ரேவை வீழ்த்தி தனது வாழ்நாளின் 5வது ATP பட்டத்தை வென்றார்.
Previous Post Next Post