நடப்பு நிகழ்வுகள் மார்ச் 5, 2019

தேசிய செய்திகள் 
1. ரஷ்ய தயாரிப்பான மிக்-21 விமானத்தைக் கொண்டு பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய “அபிநந்தன் வர்த்தமன்” என்பவருக்கு பகவான் மகாவீர் அஹிம்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹீ, 2019 பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட C – VIGIL, வாக்காளர் உதவிமையம் (Voter’s Helpline), சுவிதா செயலி (Suvidha) மற்றும் PWD செயலி ஆகிய நான்கு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
3.   ஒடிசா மாநிலத்தின் லோக் ஆயூக்தா அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி “அஜித் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட “எமிசாட்” எனப்படும் மின்னணு உளவுத்துறை செயற்கைகோளை இஸ்ரோ அமைப்பு விண்ணில் செலுத்த உள்ளது.
5. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலாவது ‘‘P.V. நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனை விருது” முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.
6. இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிற்கும் இடையே “மருத்துவப் பொருட்கள் ஒழுங்கு முறை” துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள் 
7. மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையமானது(Center For Disability Sports) மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் அமைக்கப்படவுள்ளது .
8. துபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis championship 2019) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள் 
9. மார்ச் 03 - உலக வனவிலங்கு நாள் (World Wild Life Day 2019). நோக்கம்  : நீருக்கு, கீழே வாழ்க்கை; மக்கள் மற்றும் கிரகம் (Life Below water : For people and planet) 
10. மார்ச் 04 - தேசிய பாதுகாப்பு தினம் (National Security Day)
Previous Post Next Post