நடப்பு நிகழ்வுகள் மார்ச் 29, 2019




தேசிய செய்திகள் 

1. குரோஷிய நாட்டின் உயரிய விருதான Grand order of the king of Tomislav என்ற விருதானது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2. இந்தியக் கடற்படையின் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பொருள்களுக்கு எதிரான பாதுகாப்பு வசதியானது (NBCTF – Nuclear, Biological and Chemical Training Facility) லோனவாலாவில் உள்ள “ஐஎன்எஸ் சிவாஜி”யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு "அபிஹிதயா"(ஊடுருவ இயலாத) என சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

3. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் விளம்பர தூதுவராக மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்

4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "இளம் விஞ்ஞானி திட்டம்" (யுவிகா) YUva VIgyani KAryakram என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

5. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இயையேயான "ஆஸ்இன்டெஸ் - 2019"(Ausindex-2019) என்ற இராணுவ கூட்டுப்பயிற்சி விசாக பட்டினத்தில் நடைபெற்றது

6. இந்தியாவின் வறுமை மிக்க மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் கேரளா கடைசியில் உள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

7. இந்தியாவின் நிலவைப் பற்றிய ஆராய்ச்சியின் திட்டமான  சந்திராயன் – 2 செயற்கைகோள் பூமியில் இருந்து நிலவின் தூரத்தை துல்லியமாக அளவிடுவதற்கு உதவும் நாசாவின் லேசர் கருவியான “ரெட்ரோரிப்ளெக்டர்” கருவிகளைச் சுமந்து செல்லவுள்ளது.

வர்த்தக செய்திகள்

8. Mi Pay என்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியை க்ஸியோமி (Xiaomi) மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

9. பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி பரோடா கிஷன் என்ற திட்டத்தை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது

விளையாட்டு செய்திகள் 

10. தைபே (Taipei)-யில் நடைபெற்ற 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன் ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானுபாகர் மற்றும் சௌரப் சௌத்ரி இணை தங்கம் வென்றுள்ளது.

Previous Post Next Post