உலக செய்திகள்
1. உலகளாவிய ஆசிரியர் பரிசு 2019 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “பீட்டர் தபிக்சி” (Peter Tabichi) என்பவருக்கு வழங்கப்பட்டது.
2. உலக பொருளாதார மன்றத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆற்றல் மாற்றம் குறியீட்டில் (Global energy Transition index) இந்தியா 76வது இடத்தில் உள்ளது. இதில் ஸ்வீடன் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
3. உலகிலேயே முதல் முறையாக மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை நார்வே நாடு அந்நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் அமைத்துள்ளது
தேசிய செய்திகள்
4. அமெரிக்கா வெளியிட்டுள்ள உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஹிந்துஷா குழுமம் முதலிடத்தில் உள்ளது
5. இந்தியா மற்றும் ஓமான் இணைந்து இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க உள்ளது
6. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த “நவின் சாவ்லா” அவர்களால் எழுதப்பட்ட “அனைத்து ஓட்டுகளும் எண்ணப்படும்” (Every Votes Counts) என்ற புத்தகம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.
7. நிதி ஆயோக்கானது, எதிர்கால நடைமுறைகள் மற்றும் கொள்கை முயற்சிகளுக்கான வடிவமைப்பை உருவாக்குதல் மற்றும் முழுமையான நிதி சேர்ப்பிற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட, நிதி தொழில்நுட்ப மாநாட்டை (FinTech Conclave – Financial Technology) புதுடெல்லியில் நடத்தியுள்ளது.
8. மைக்ரோ சாப்ட் நிறுவனமானது வாசிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, டிஜிட்டல் தகவல்களை டி.என்.ஏ (DNA) ஆக மாற்றும் கருவியை கண்டறிந்துள்ளனர். இந்த மென்பொருள் அமைப்பானது 0 மற்றும் 1 என்ற டிஜிட்டல் தகவல்களை DNA வரிசையில் உள்ள அடினைன், தையமின், குவானைன், சைட்டோசைன் ஆக மாற்றி தரவுகளை சேமிக்கிறது.
9. சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு (Air port Council International) வெளியிட்டுள்ள, உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் அமெரிக்காவின் ஹார்ட்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
10. கர்நாடகா லோக்சபா தேர்தல்-2019-ன் நல்லெண்ணத் தூதுவராக பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரரான கிர்ஷ் என் கௌடா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
11. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அதிகரிக்கவும், நிதி தொழில்நுட்பம் மூலம் நிதி சேர்த்துக் கொள்ளவும், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நந்தன் நீலகேனி” தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.