நடப்பு நிகழ்வுகள் மார்ச் 2, 2019

தேசிய செய்திகள் 
1. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் உயரிய அமைப்பான “போலீஸ் புகார்கள் ஆணையத்தின் (Police Complaints Authority) தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.தேஜி (P.S. Teji) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
3. வெயிலில் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்கள், உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கம் மற்றும் தொல்லைகளில் இருந்து தப்பிக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள அரசின் மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக செய்திகள் 
4. 2019 மற்றும் 2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு இருக்கும் என தரச்சான்று நிறுவனமான மூடிஸ்(Moody's) தெரிவித்துள்ளது.
5. 2018ம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது. மேலும் பேங்க் ஆஃப் பரோடா இரண்டாம் இடத்திலும் எஸ்பிஐ மூன்றாம் இடத்திலும் உள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
6. அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
விளையாட்டு செய்திகள் 
7. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி-20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ளார் .
8. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள்(715) எடுத்து அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை  நியூசிலாந்து அணி படைத்துள்ளது.
9. சாபஹாரில் (ஈரான்) நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப் பதக்கம் வென்றார்
10. 47வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
11. ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா-வின் பயிற்சியாளராக ஜெர்மைன் ஜென்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post