உலக செய்திகள்
- மலேசியாவின் 16ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 01, 2019
தேசிய செய்திகள்
- பிரதம மந்திரியின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் 4 இலட்சம் வீடுகள் கட்டித்தர அரசானை பிறப்பிக்கப்படவுள்ளது
- இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டமான “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” (Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டு மொத்த அளவில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation – 2019) புதுடெல்லியில் நடைபெற்றது.
- சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் “சிறந்த அணிவகுப்பில்”(Best Parade) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது(Information and Broadcasting Ministry) முதல் பரிசினை வென்றுள்ளது.
- ஆண்ட்ரி மேகின் என்பவர் எழுதிய லா வி டி’வின் ஹோம் இன்கோன்னு (Andrei Makine’s “La Vie d’un homme inconnu” – தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பானது இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான “ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசினை” வென்றுள்ளது.
- தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 16% அதிகரித்துள்ளது
பட்ஜெட் செய்திகள்
- இடைக்கால பட்ஜெட்டில் வரும் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த செலவுகள் 27,84,200 கோடியாக அதிகரித்துள்ளது.
- ரயில்வே துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 1,58,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 3,27,679 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேசிய கல்வித் திட்டத்திற்கான 38,572 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 27,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தாழ்த்தப்பட்டோருக்கான நலத்திட்டங்களுக்காக 1,801 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக 50,86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரியின் வேளாண் நிதித் திட்டதின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- வருமான வரிக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது
- உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.