தேசிய செய்திகள்
1. ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மன்றத்தின் “பயோ ஆசியா – 2019” (Bio Asia – 2019)ன் 16வது பதிப்பு தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு: “வாழ்க்கை அறிவியல் 4.0 – இடையூறுகளை சீர்குலைத்தல்” (Life Science 4.0 – Disrupt the Disruption”) என்பதாகும்.
2. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களுக்கிடையே உருவாக்குவதற்காக “கேலோ இந்தியா” என்ற மொபைல் செயலியை பிரதமர் மோடி அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற “இளைஞர் பாராளுமன்ற விழாவில்” அறிமுகப்படுத்தியுள்ளார்.
3. இந்தியா மற்றும் வங்காள தேச நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இராணுவப் பயிற்சியான “சம்ப்ரிடி – 2019” (Sampriti – 2019) ஆனது வங்காள தேசத்தில் உள்ள டாங்கெல் பகுதியில் நடைபெற்றது.
4. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ஏவுகணையான “QRSAM” (Quick Reaction Surface to Air Missile) என்ற தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அளிக்கும் இரு ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக ஒடிசாவின் சண்டிப்பூரில் சோதனை செய்துள்ளது.
5. கயானா குடியரசு (Republic of Guyana) நாட்டிற்கான இந்திய உயர் ஆணையராக ஜே.ஜே. ஸ்ரீனிவாசா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை பற்றி விவாதிப்பதற்கான “எழுச்சி இந்தியா” உச்சி மாநாடு 2019 – ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு : “அரசியலுக்கு அப்பால் தேசத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை” (Beyond Politics; Detining National Priorities) என்பதாகும்.
7. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட "தோட்டத்தில் உள்ள சொற்கள்" புது தில்லியிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில் (IIC) நடைபெற்றது.
8. பெப்சியோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திர நூயி அமேசானின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. பியுஷ் கோயல் ரயில் டிரிஷ்டி என்ற கணினி முகப்பை(Rail Drishti Dashboard) பயணிகளுக்கு வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கத் துவக்கிவைத்தார்
10. “தரம், அங்கீகாரம் மற்றும் தரவரிசை – இந்திய உயர்கல்வி துறையில் ஒரு அமைதி புரட்சி” (Quality, Accreditation, and Ranking – A silent Revolution in the offing in Indian Higher Education) என்ற புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்
விளையாட்டு செய்திகள்
11. சுரேஷ் ரெய்னா டி 20 போட்டிகளில் 8000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
1. ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மன்றத்தின் “பயோ ஆசியா – 2019” (Bio Asia – 2019)ன் 16வது பதிப்பு தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு: “வாழ்க்கை அறிவியல் 4.0 – இடையூறுகளை சீர்குலைத்தல்” (Life Science 4.0 – Disrupt the Disruption”) என்பதாகும்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28, 2019