நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 26, 2019

உலக செய்திகள் 
1. சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ளது
2. ரஷ்யா – சீனா – இந்தியா நாடுகள் இணைந்த “RIC” அமைப்பின், 16வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் (16th RIC Foreign Ministerial Meeting) சீனாவின் வூசென் (Wuzhen) நகரில் நடைபெற உள்ளது.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 26, 2019
தேசிய செய்திகள் 
3. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்துக்கு "வெப் ரத்னா" விருது வழங்கப்பட்டுள்ளது.
4. வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாத்ததற்காக வழங்கப்படும் சர்வதேச விருதான “உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது – 2019” இந்தியாவின் திவ்யா கர்னாடு (Divya Karnad) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
5. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை வழங்கும் “பிரதான் மந்திரி விவசாய நலத்திட்டம்” (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் உத்திரபிரதேசத்தின் கோரக்பூரில் தொடங்கி வைத்துள்ளார்.
6. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரத்தில் “இந்தியாவின் முதல் Fulldome-3D திரையரங்கம்” (Fulldome 3D Digital Theatre) மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
7. பாரிஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சோலார் அமைப்பின் 73வது நாடாக சவுதி அரேபியா இணைந்துள்ளது.
8. பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்காக 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசானது “முக்கிய மந்திரி யுவ ஸ்வாபியன் யோஜனா” (Mukhyamantri Yuva Swabhiman Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
9. தாவரவியலாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் மன்னார் வளைகுடாவில் கடல்பசுக்களை பாதுகாப்பதற்காக “கடற்புற்கள் வளர்ப்பு திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.
10. டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விளையாட்டு செய்திகள் 
11. உத்திரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து இடையேயான சர்வதேச டி-20 (T20) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது 278 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்துள்ளது.
12. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக 500 ரன்கள் குவித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி படைத்துள்ளார்.

Previous Post Next Post