நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 23, 2019


உலக செய்திகள்
  1. ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  2. இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 23, 2019

தேசிய செய்திகள்
  1. லாக்ஹீட் மார்ட்டின் என்றஅமெரிக்க நிறுவனம் டாடா நிறுவனதுடன் இணைந்து இந்தியாவில் புதிய F-21 போர் விமானத்தை தயாரிக்கிறது
  2. நாட்டிலேயே முதல் முறையாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் ‘கே.பி.பாட்’ என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரியாக ரோபோவை பணியில் அமர்த்தி அந்த மாநில போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
  3. ஜெட் இயந்திரம் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்சும், ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் சேர்ந்து, ‘ஹாம்ர்-இ’ என்ற நுண் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.
  4. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஏசியன்) வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி டெல்லியில் தொடங்கியுள்ளது.
  5. குடியரசுத் தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்தின், கூடுதல் நீதிபதியாக செந்தில் குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை நியமித்துள்ளார்.
  6. இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  7. 60 வயதைக் கடந்த அனைவருக்குமான “முக்கியமந்திரி விரிதாஜன் ஓய்வூதிய திட்டம்” – (MVPY) மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக, “பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா” (BPSY) என்ற ஓய்வூதிய திட்டத்தையும் பீகார் தொடங்கியுள்ளது.
  8. ‘ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு’ (Operation Digital Board) என்ற திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  9. “நியாய பந்து”(Nyaya Bandhu) என்ற பெயரில் சட்ட சேவைக்கான மொபைல் செயலியை, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்துள்ளார்.
  10. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் மேம்பட்ட வைராலாஜி நிறுவனத்தை (IAV) திறந்துவைத்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பிரபஞ்சத்தின் (Universe) தோற்றம் குறித்து புரிந்து கொள்வதற்காக ஒட்டுமொத்த வான்பரப்பையும் ஆய்வு செய்வதற்காக மிகவும் புகழ்பெற்ற திட்டமான ஸ்பியரெஸ் (SPHEREx) திட்டத்தை நாசா தொடங்க உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. 12 பொதுத்துறை வங்கிகளில் 48,239 கோடி ரூபாயை நிதி அமைச்சகம் முதலீடு செய்துள்ளது.
Previous Post Next Post