நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 21, 2019

தேசிய செய்திகள்
  1. டாக்டர் ஹர்ஷ் வர்தன் புது டெல்லியில் "ஒரு சுகாதார இந்தியா மாநாடு 2019"ஐ தொடங்கி வைத்தார். 
  2. 4வது வேளாண் தலைமை உச்சி மாநாடு - 2019 ராதா மோகன் சிங் ஹரியானாவில் உள்ள சோனிபட் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். இம்மாநாட்டின் கருத்துரு “Entrepreneurship & Agri Business; Agri Allied – A Promising Sector and Agri Service- Direct Marketing”.
  3. ஜி.சி. அனுபமா(GC Anupama) இந்தியாவின் வானியல் சங்கத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  4. ஸ்மிருதி இராணி புது தில்லி ஹஸ்த்ஷில்ப் எனப்படும் கைவினை பொருட்களுக்கான அரங்கத்தை தொடங்கிவைத்தார்
  5. ஏ.கே.சர்மா இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தின் இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
  6. இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக பேச்சாளரான பேராசிரியர் பைசல் இஸ்மாயில் என்பவர் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா பள்ளியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. இந்திய ரிசர்வ் வங்கி இடைக்கால இலாபத்தில் ரூ. 28,000 கோடியை இந்திய அரசிற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் நிதி பற்றக்குறை நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்4% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. மலேசியாவின் ஸ்குவாஷ் இராணியான நிகோல் டேவிட்(Nicol David ) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  2. மகாராஷ்டிரா மாநில அரசின் ஷிவ் சத்ரபதி விளையாட்டு விருது - 2019 மல்லகம்ப் பயிற்சியாளரான உதய் தேஷ்பாண்டே மற்றும் பேட்ஸ்வோமேன் ஸ்மிருதி மந்தானா ஆகியோருக்கு மும்பையில் வழங்கப்பட்டது.
  3. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் (ODIs) இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்
  4. இந்தியாவின் நட்சத்திர கால்பந்து வீரரான சுனில் சேத்ரிக்கு 'புட்பால் ரத்னா'(Football Ratna) விருதை வழங்கியுள்ளது டெல்லி கால்பந்து விளையாட்டு கூட்டமைப்பு.
இரங்கல்  
  1. அமெரிக்கவின் அனுபவம் மிக்க இராணுவ வீரர் மற்றும் நாவலாசிரியர் அனைவராலும் E.B. கிரிஃபின் (அவரது பேனா பெயர்) என்றழைக்கப்படும் வில்லியம் ஈ பட்டர்வொர்த் III காலமானார்
  2. 'காலநிலை அறிவியலின் தாத்தா' என்றழைக்கப்படும் வாலஸ் ஸ்மித் ப்ரோக்கர்(அமெரிக்கா) என்பவர் காலமானார்
Previous Post Next Post