உலக செய்திகள்
- இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே கம்பெனி செயலாளர் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- பாகிஸ்தானின் உயரிய விருதான “நிஷான்-இ-பாகிஸ்தானி” என்ற விருதானது, சவூதி அரேபியாவின் இளவரசர் “முகமது பின் சல்மான்” அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டு அரசால் வழங்கப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
- மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய (CBIC) உறுப்பினராக அசோக் குமார் பாண்டே மற்றும் சந்தீப் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பெண்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் அனைத்து விதமான அவசர உதவிகளுக்காவும் ஒரே“அவசர அழைப்பு எண் – 112”என்ற மொபைல் சேவையை தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
- 40வது சர்வதேச பாலைவன திருவிழாவானது இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மாரில் நடைபெற்றது.
- நான்காவது உலக பாராமெடிக்கல் மற்றும் மருத்துவ கருவிகள் மாநாடு – 2019 பெங்களுரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு “தரமான மலிவான முறையில் சுகாதார பராமரிப்பு மற்றும் இந்தியா மருத்துவ சாதனத்தை செயல்படுத்துதல் – 2019”(Enabling Quality Affordable Healthcare and that of India Medical Device – 2019) என்பதாகும்.
விளையாட்டு செய்திகள்
7. விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் “லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் – 2019” விருது (Laureus Sports Award) செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பவருக்கும் லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை “சைமன் பைல்ஸ்” என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.