தேசிய செய்திகள்
- இரண்டாவது தேசிய நீடித்த மற்றும் சுற்றுசூழல் நட்பு கொண்ட தொழில்துறை உற்பத்திகான மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
- ஐக்கிய அரபு அமீரகம் உதவியுடன் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள அமராவதியில் இந்தியாவின் முதல் மாவட்ட குளிரூட்டும் அமைப்பு கட்டப்பட உள்ளது.
- உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
- இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் பத்திரங்களில் வரம்புகளை உயர்த்தியது. இதன் மூலம் 20% பங்குகளை அன்னிய நேரடி முதலீடு(FDI) ஆக வங்கிகள் வைத்துக்கொள்ள முடியும்
- எடேல்வெய்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் வங்கியும் இணைந்து மூலோபாய கூட்டுறவை உருவாக்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- பாரத் -22 திட்டதிற்காக பரிமாற்ற வர்த்தக நிதியம்(ETF) என்ற நிதி அமைப்பிடம் இருந்து இந்திய அரசு 10000 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது.
- புத்துயிர் மற்றும் நகர்ப்புற உருமாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) கீழ் ஸ்வச்சேதா சிறப்பு விருதுகள் 2019 நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ராய்கர் (சத்தீஸ்கர்) முதல் பரிசையும் , அம்பிகாபூர் (சத்தீஸ்கர்) இரண்டாவது பரிசையும் மற்றும் கும்பகோணம் (தமிழ்நாடு) மூன்றாவது பரிசையும் பெற்றன.
விளையாட்டு செய்திகள்
- நெதர்லாந்தின் ஈவா டி கோயிட்(Eva de Goede) மற்றும் பெல்ஜியத்தின் ஆர்தர் வான் டோரன்(Arthur van Doren) ஆகியோர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான பரிசை வென்றனர் .
இரங்கல்
- முன்னாள் கோவா துணை சபாநாயகரும் எழுத்தாளருமான விஷ்ணு வாக் காலமானார்.