நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 17, 2019

உலக செய்திகள்
  1. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்தியா-அமெரிக்க தலைமை பொருளாதார கூட்டமைப்பு மாநாடு மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக உரையாடல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 17, 2019

தேசிய செய்திகள்
  1. புல்வாமா தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  2. புல்வாமா தீவிரவாத தங்குதலினால் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த “வர்த்தகத்திற்க்கு உகந்த நட்புறவு நாடு” (Most Favored Nation) என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  3. ‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’ மற்றும் ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி’ அமைப்புகளின் சார்பில் ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் நடைபெற்றது .
  4. நாட்டில் உடனடி நீர் சவால்களை சமாளிக்கவும், கையாளவும் 7 ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது. நாட்டின் நீர்தேவைக்கு 40 மில்லியன் யூரோக்கள் (ரூ .323 கோடி) முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.
  5. டாக்டர் ஹர்ஷ் வர்தன் கர்நாடகாவில் தர்வாட் பகுதியில் அக்ரோமெட் என்ற வானிலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தை தொடங்கிவைத்தார்.
  6. ஹிமாசல பிரதேசத்தில் சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது
  7. சென்னையில் நடைபெற்ற 6-ஆவது ஓபன் தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் கே.டி.இர்ஃபானும், மகளிர் பிரிவில் செளமியாவும் பட்டம் வென்றனர்.
விளையாட்டு செய்திகள்
  1. அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற 83வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் வர்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
Previous Post Next Post