நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2019, Tamil Current Affairs Feb 2019, இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16, 2019
தேசிய செய்திகள்
- 4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம் பெற்றுள்ளதாக டிராய் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது
- உலக அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பிற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருதை தென்கொரியா வழங்கப்படுகிறது.
- வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படையின் வலிமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது. இந்திய விமானப் படையில் இடம்பெற்றுள்ள தேஜாஸ், ஜாக்குவார், மிக் ரகங்களை சேர்ந்த போர் விமானங்கள் இதில் பங்கேற்று செயல் விளக்கங்களை செய்து காட்டின.
- நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 (LAIRCM) விமானத்தை 190 மில்லியனுக்கு இந்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது. LAIRCM– என்பது மனிதத் தாக்குதல், மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து விமானத்தைப் பாதுகாக்கும் ஓர் திட்டமாகும்.
- ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31 என்றும் மத்திய வருமானவரித் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
- ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 5 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.
விளையாட்டு செய்திகள்
- இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவராக கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம் துணைத் தலைவர்களாக தினேஷ் பட்டீல், ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.