நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2019, Tamil Current Affairs Feb 2019, இன்றைய நடப்பு நிகழ்வுகள்
தேசிய செய்திகள்
- ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரான அஸ்வனி லோகானி மீண்டும் இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அரசு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தவிர அனைத்து முதியோர்களுக்கும் ஓய்வூதியம் அளிப்பதற்க்காக முதலமைச்சரின் முதியோர் ஓய்வூதியத் திட்டதை (Mukhya Mantri Vriddha Pension Yojana (MMVPY)) தொடங்கி வைத்துள்ளார்
- 3 வது இளைஞர் ரியல் எஸ்டேட் அபிவிருத்தி மாநாடு (CREDAI) YouthCon 2019 புது டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு NexGEN - அடுத்த தலைமுறை என்பதாகும்
- பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- யுனிசெப் நிறுவனமானது மஹாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டிற்காக (WCD) கோவா அரசுடன் இணைந்து குழந்தை பாதுகாப்பு பற்றிய புரிந்துணர்தல் விவாதத்தை நடத்தியது. இதன் கருத்துரு " கோவா: குழந்தை பாதுகாப்பில் உள்ள முக்கிய சவால் " என்பதாகும் .
- கேரளாவில் “கார்த்தியாயினி” என்ற 96 வயது மாணவி காமன்வெல்த்தின், கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக (Commonwealth of Learning Goodwill ambassador) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான “மில்லியன் டாலர் டான் டேவிட் பரிசு” (Million Dollar Dan David Prize), இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் சஞ்சய் சுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- நாட்டின் இரண்டாவது “மின்னணு தொழில் முனைவோர் பூங்காவது” (Electropreneur Park), ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் தொடங்கப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- டெரிக் பெரேரா(Derrick Pereira) இந்தியாவின் U-23 கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹனுமா விஹாரி இரானி கோப்பை போட்டியில் ஹாட் ட்ரிக் சதம்(தொடர்ந்து 3 சதம் அடித்தல்) அடித்து சாதனை படைத்துள்ளார்.
- எம்.ஆர்.எஃப் சாலஞ்ச் பட்டத்தை (MRF Challenge title) வென்ற முதல் பெண் ஓட்டுநர் எனும் பெருமையை இங்கிலாந்தின் ஜாமி சாட்விக் (Jamie Chadwick) பெற்றுள்ளார்.
இரங்கல்
- ஜெர்மன் நோபல் பரிசு வென்ற மான்ஃப்ரெட் ஈஜென் காலமானார்