நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14, 2019

தேசிய செய்திகள்
  1. அசாம் மாநில அரசு பெண்களின் திருமணத்திற்கு இலவசமாக தங்கம் வழங்குவதற்காக “அருந்ததி” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது
  2. பேரிடர் நிவாரணப் பயிற்சியான “ரகாத் பயிற்சி” (Rahat Exercise) ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கோட்டா ஆல்வார் ஆகிய பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டது.
  3. எய்ச்சேர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்தார்த்த லால்(Siddhartha Lal) நியமிக்கப்பட்டுள்ளார்
  4. இண்டோ-ஜெர்மன் சுற்றுசூழல் மாநாடு இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே புது தில்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள் "சுத்தமான காற்று மற்றும் பசுமை பொருளாதாரம்" என்பதாகும்
  5. குஜ்ஜார் உள்ளிட்ட 5 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒடுக்கீடு அளிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  6. மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர்.
  7. உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் பெற்றுள்ளான். இவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான்.
  8. இமாலய பிராந்தியத்தில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மேக வெடிப்பு நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹெக்ரி கர்வால் மாவட்டத்தில் (Tehri Garhwal) மேக கண்காணிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. (Himalayan Cloud Observatory) இது நாட்டின் 2வது மேக கண்காணிப்பகம் ஆகும்.
  9. நாகர்கோவில், ஓசூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் செயல்பாட்டை நிறுத்தியதாக நாசா அறிவித்துள்ளது.
Previous Post Next Post