உலக செய்திகள்
- இந்தியாவும் நோர்வேவும் இணைந்து கடல் மாசுபாட்டை குறைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13, 2019
தேசிய செய்திகள்
- புது தில்லியில் உள்ள யுனானி மருத்துவம் ஆராய்ச்சி மையத்தில் (CCRUM) யுனானி மருத்துவதற்க்கான தேசிய மாநாட்டை மணிப்பூரின் கவர்னர் டாக்டர் நஜ்மா ஹெப்டுல்லா திறந்து வைத்தார் .
- தமிழகத்தில் சேலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்ட உள்ளது
- இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்து தைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
- எதிரியின் இலக்கைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் வல்லமை மிக்க 54 இஸ்ரேலிய ஆளில்லா ஹாரோப் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட உள்ளன.
- 18 உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள் தானியங்கி கருவிகளில் தமிழ் மொழி பயன்பாடு.
- ராகேஷ் ஆனந்த் பக்ஷி (Rakesh Anand Bakshi) என்பவர் எழுதிய, “Let’s talk On Air : Conversation with Radio Presenters” என்ற புத்தகம் உலக வானொலி தினமான (World Radio Day) பிப்ரவரி 13ல் (இன்று) வெளியிடப்படுகிறது.
- உலக அரசின் உச்சி மாநாட்டின் (World Government Summit) ஏழாவது பதிப்பு துபாயில் (ஐக்கிய அமீரகம்) நடைபெறவுள்ளது.
- இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மரபுசார் அமைப்புகளின் துறைகள் மீது ஒத்துழைப்பு நல்கிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
- இமாச்சலப் பிரதேசத்தின் உணவு சேகரிக்கும் முறைக்கு ஊக்கமளித்து, உணவு வீணாவதை தடுப்பதற்காக, அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவானது “உனா மாவட்டத்தில்” அமையவுள்ளது.
- தமிழகத்தின் கூடுதல் தேர்தல் அதிகாரியாக எம்.பாலாஜி மற்றும் வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 2019ல் கோரென்டின் மவுட்டெட் (பிரான்ஸ்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான உயிர் 360(Bio 360 Life Sciences Park) என்ற பூங்காவை தொடங்கிவைத்தார்
இரங்கல்
- இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பரான கோர்டான் பேங்க்ஸ் காலமானார்.
முக்கிய தினங்கள்
- பிப்ரவரி - உலக வானொலி தினம் (World Radio Day). கருப்பொருள்: உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி (Dialogue, Tolerance and Peace)