நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 11, 2019

உலக செய்திகள்
  1. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) நூற்றாண்டு விழாவை , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்கர்வால் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கிவைத்தார்
  2. முகேஷ் அம்பானி, ஹுருன் இந்தியா அறக்கட்டளை வெளியிட்ட அதிக நன்கொடை வழங்கியோர் பட்டியலில் முதலிடத்தை இடத்தைப் பிடித்தார்
  3. இந்தியாவில் நோயெதிர்ப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை மாற்றியமைப்பதற்காக 'மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டத்தை' சுகாதார அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது
தேசிய செய்திகள்

  1. மார்ஷல் தீவு நாட்டிற்கான இந்தியாவின் தூதராக “சன்ஜய் குமார் வர்மா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN’s FAO) பொது இயக்குநர் பதவிக்கு இந்திய அரசின் சார்பில் NITI Aayog உறுப்பினர் “ரமேஷ் சந்த்” என்பவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  3. இந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே நீலப்பொருளாதார வளர்ச்சிகான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  4. விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக நான்கு சினூக் ரக இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
  5. PETRO TECH – மாநாட்டின் 13வது பதிப்பு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரெட்டர் நொய்டாவில் நடைபெற்றது. இதில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காக நடத்தப்பட்டது.
  6. இந்திய தேர்தல் ஆணையமானது, குடிமக்களுக்கு தங்கள் விவரங்களை சரிபார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்பதற்காகவும் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் “வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டதை” தொடங்கியுள்ளது.
  7. ஜம்மு & காஷ்மீர் மாநில அரசானது லடாக்(Ladakh) பகுதியின் நிர்வாக/வருவாய் பிரிவை, மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவித்துள்ளது.
Previous Post Next Post